மன்ஹாட்டன் நகர டாக்டர் ஒருத்தர் குடிக்க தண்ணீர் கேட்டதால அவரையும் அவர் குடும்பத்தையும் விமானத்த விட்டு இறங்க சொல்லிட்டாங்களாம்.
La Guardia விமான நிலையத்துல 2 மணி நேரமா நின்னுகிட்டு இருந்த ஸ்பிரிட் விமானத்துல தான் இந்த கூத்து நடந்திருக்கு. டாக்டர் அவரோட கர்ப்பிணி மனைவிக்காக குடுக்க தண்ணீர் கேட்டிருக்கார். டேக் ஆப்-க்கு முன்னாடி நாங்க தண்ணி குடுக்க மாட்டோம். அது எங்க பாலிசில இல்லேன்னு சொல்லிருக்காங்க. அவர் விடாம கேட்டதால, அவரையும் அவர் குடும்பத்தையும் (மரியாதையா!?) இறங்க சொல்லிட்டாங்க.
டாக்டர் என்ன பண்ணுவாரு பாவம்… ஊருக்கு வந்து ஒவ்வொரு நியூஸ் பேப்பர்-ஆ பேட்டி குடுத்துட்டாரு.
அட, அங்கயுமா தண்ணிக்கு சண்டை?!