வேலை பார்க்கும்போது படிச்சது. http://rkguru.blogspot.com/2010/09/blog-post_25.html. படிச்சதும் தலைல அடிச்சிகிட்டது தான் பாக்கி. கீழ இருக்கறத அவரோட ப்ளாக்லையே கமெண்ட்டா போடலாம்னு நினைச்சேன். அங்க வந்திருக்கற response பார்த்து, கும்மி அடிக்கற கூட்டத்துக்கு நடுவுல சொல்ல வேண்டாம்-ன்னு இங்க சொல்லிருக்கேன்.
“வந்துட்டாருய்யா அடுத்த உண்மைத் தமிழர்.. LK சார் நீங்க கரெக்டா சொல்லிருக்கீங்க. எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடறாங்க பாருங்க? இந்திக்காரங்க, தெலுகுக்காரங்க எல்லாம் செய்ய முடியாதத தமிழ்க்காரங்க செஞ்சிருக்கோம். அது தெரியலை இவர் கண்ணுக்கு... பாவம். காசு போட்டு படம் பண்றதும் ஒன்னும் சின்ன விஷயம் இல்லே.. அடிச்ச காச எல்லாம் நம்ள நம்பி போடலைனா, உங்களுக்கும் எனக்கும் மெல்றதுக்கு அவல் free -யா கிடைக்காது. நம்ம கிட்ட இருந்து எல்லாத்தையும் சுருட்டிகிட்டு போறாங்கனு நினைச்சீங்கனா, ப்ளாக்ல டிக்கட் வாங்க வேண்டாம்... ஏதாவது டி.வி.-ல காட்டற வரைக்கும் பொறுமையா இருக்கலாம். உங்களுக்கு வேண்டாம்னா நீங்க படத்த பார்க்க வேண்டாம். உங்க குடும்பத்துல யாரவது பார்க்கனும்னு சொன்னா அவங்களையும் போக வேண்டாம்னு சொல்லுங்க. அட்லீஸ்ட் ரெண்டு மூணு டிக்கெட் மத்தவங்களுக்கு கிடைக்கும்.
ரஜினி படம் வந்துதுனாலே மாலை போடறதும், பால் அபிஷேகம் பண்றதும் ஒன்னும் புதுசு இல்லியே.. அதுக்கு படத்த எதுக்கு திட்டனும்? முட்டி போட்டு மலை ஏறினது பைத்தியக்காரத்தனம் தான். அதுல எந்த மாற்றுக்கருத்தும் இல்லே. ஆனா அந்த வேலைய செஞ்சவங்கள தான் திட்ட தோணுதே தவிர, படத்த ஒட்டு மொத்தமா குறை சொல்ல முடியாது.
படத்த படமா பார்க்க கத்துக்கோங்க. After all, it is just an entertainment media. அந்த மூணு மணி நேரத்துக்கு அப்பறம் சொரணை இல்லாதவங்களுக்கு சொரணை வரப் போறதில்லே; தமிழ் ஆர்வலர்கள் anti-tamilians-ஆக மாற போறதும் இல்லே. In spite of all the controversies, nobody can deny the fact that the technology in the film is something to be expected.
ஒரு விஷயம்.. நான் selfish-ஆ இல்லே.. ஆனா இந்த விஷயத்துக்கு இவ்ளோ BP ஆகாதுன்னு தான் சொல்ல தோணுது.
ரெண்டாவது.. எது பத்தி எழுதினாலும் சரி.. எந்திரன், பிரபுதேவா/நயன்தாரா, காமன்வெல்த் -ன்னு ஒரு லிஸ்ட் வெச்சிருந்தேன்.. இதை பற்றி எல்லாம் மட்டும் எழுதிட கூடாதுன்னு. கூடியமட்டும் உபயோகமான / இன்டரஸ்டிங்கான விஷயம் மட்டும் தான் சொல்லனும்னு இருந்தேன். என்னமோ.. இது எழுதாம இருக்க முடியலை.
எது எப்படியோ, நான் இந்தியாவுல இல்லே. என்கூட வேலை பார்க்கும் ஒருத்தர் (இந்த ஊருக்காரர்) கேட்டாரு. "And so.. what is the upcoming movie of Slumdog millionaire famous A.R.Rahman?" .. பெருமையா சொன்னேன்.. "It is called Enthiran.. Meaning… the robot.." .. படம் எது பற்றின்னு கேட்டாரு. சொல்றதுக்கு எனக்கு விஷயம் இருந்துது”
கிள்ளினா எனக்கு வலிக்கும்னு சொல்றவங்களும் சரி, இந்த கிள்ளுக்கு எல்லாம் ஏன்யா வலிக்கனும்னு சொல்றவங்களும் சரி.. எதாவது சொல்றதுக்கு இருந்தா சொல்லிட்டு போங்க.
பழகித்தான் பாப்போமே..!!!
ReplyDelete