டீலா நோ டீலா:
அது என்னமோ இந்த ப்ரோக்ராம்மோட கான்சப்ட் மட்டும் எனக்கு புரியலை. வாழ்க்கைல எந்த துன்பமும் இல்லாம சந்தோஷமா இருக்கறவங்க இவ்வளவு காச கண்ணால கூட பார்க்க கூடாதா? கணவர் விட்டுட்டு போனவங்க, அப்பா அம்மா இல்லாதவங்க, படிக்க வசதி இல்லாதவங்க.. இவங்க எல்லாம் தான் வராங்க. ஒரு வேளை சந்தோஷமா இருக்கறவங்ககிட்ட எல்லாம் அம்பது லட்சதுக்கு மேல இருக்கா? (நான் நிம்மதியா, கடவுள் அனுக்ரஹத்தில எந்த குறையும் இல்லாம தான் இருக்கேன். ஆனா என்கிட்டே அவ்ளோ தேராது). நான் தப்பு சொல்லலை. அவங்க செலக்ட் பண்ற நோக்கம் சரியா இருக்கு. ஆனா ஒரு சேஞ்சுக்கு எந்த கஷ்டமும் இல்லாதவங்களையும் கூப்பிடலாமே.. சந்தோஷமா இருக்கறவங்க மத்தவங்களுக்கு உதவி செய்ய மாட்டாங்களா?
இந்த வாரம் ரெண்டு எபிசோட் பார்த்தேன். ஒன்னு, கிராமிய கலைகளை கத்துக்கிட்டு அத வளர்க்கனும்னு ஆசைப்பட்ட ஒருத்தர். நல்லாவே இருந்துது.. (அதுலயும் எனக்கு ஒரு டவுட்.. டான்ஸ்ல எவ்வளவோ இருக்கும்போது, நிறைய பேரு அத ஒரு சாகச கலையா தான் பார்க்கராங்களோனு தோணுது. ஆடினவர் நல்லாவே ஆடினார். ஆனா, கைத்தட்டல் நிறைய வந்தது அவர் பெஞ்ச் மேல ஏறி நின்னு ஆடினதுக்கு தான்.. ).. என்னடா இது நம்ம ஆசை பட்டா மாதிரி சந்தோஷமா (அவர் ரொம்ப பெரிய கஷ்டத்துல இருக்கறவர் மாதிரி எனக்கு தோணலை.. ) இருக்கற ஒருத்தர கூப்பிட்டாங்களேன்னு நினைச்சேன். கூடவே ரெண்டாவது எபிசோட் ஒன்னும் பார்த்தேன். அதுல ஒருத்தர்.. அரசியல்வாதி ஆகணுமாம்.. அடக்கடவுளே.. அந்த கொடுமைய நீங்களே பாருங்க.. நோ கமெண்ட்ஸ்.
காமன்வெல்த்:
சும்மா சொல்லக்கூடாதுங்க நம்ம ஆட்க்கள.. அவன் மேல பழிய போட்டு இவன் மேல பழிய போட்டு, எல்லா ட்ராமாவும் நடத்தி, ஒரு வழிய "கோலாகல கொண்டாட்டமா" ஆரம்பிச்சிட்டாங்க. நம்ம எல்லோரோட ப்ளட் பிரஷர்-யும் எக்கச்சக்கத்துக்கு எத்தி விட்டு, எல்லாத்தையும் கடைசி வரைக்கும் பெண்டிங்க்ல வெச்சி அப்பறம் தான் முடிப்போம்னு தேரிலே பாவம் மத்தவங்களுக்கு. கலைவிழா நல்லா இருந்துது. மத்தபடி எந்த விஷயமும் எனக்கு பிடிக்கலை. தன்னடக்கம்-ன்னு ஒரு வார்த்தையும் இருக்கு.. அதையும் கத்துக்கலாம்ன்னு எல்லாம் இவங்களுக்கு எப்போ தோணுமோ? அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்!
கொஞ்சமா எந்திரன்:
நிஜம்மாவே கொஞ்சூண்டு தான்.. ஏன்னா, சொல்றதுக்கு நிறையவே இருக்கு. டைம் தான் இல்லே. Hopefully, I will share my first impression before its too late. ஒரு வழியா பார்த்துட்டேன். இங்க பெல்ஜியம்ல எங்கேயும் இல்லே. யாஹூ ஆன்சர்-ல எல்லாம் கேட்டு எங்கயும் பதில் கிடைக்காம, யாரோ சொன்னாங்க… இங்க நெதர்லாண்ட்ஸ்ல ரெண்டு மூணு தியேட்டர்ல, அதுவும் இந்த வீக்கென்ட் மட்டும் ஸ்க்ரீன் பண்றதா .. நல்ல வேளையா தப்பிச்சேன்.. எதுவும் மாட்டலைன்னா பாரீஸ்-க்கு போறதா ஒரு ப்ளான் இருந்துது.. (வீட்ல பயங்கர திட்டு.. ரெண்டு மணி நேரம் படத்துக்கு நாலு மணி நேரம் வண்டிய ஓட்டிட்டு போக சொல்றியே.. என்னா வில்லத்தனம் உனக்குன்னு). மூவி நல்லாவே இருந்துது... நிறைய இருக்கு பேச. ஒரு விஷயம் மட்டும் இப்போ.. தயவு செய்து இன்னும் படம் பார்க்காதவங்க, எந்திரன் பற்றிய போஸ்ட் எல்லாம் படிச்சிடாதீங்க. அந்த தப்பை நான் பண்ணேன்.. கிட்டத்தட்ட ஒவ்வொரு சீன்லேயும் மனசுக்குள்ள அடுத்தது இது தான்.. அடுத்தது இதுதான்னு ஒப்பிச்சிகிட்டே இருந்தேன். அதுவும் எல்லோரும் அந்த கிடைசி 40 நிமிஷம் பத்தி போட்ட பிட்டுல ரொம்பவே ஏமாந்துட்டேன். (40 நிமிஷம் நல்லா தான் இருந்துது. ஆனா எதிர்பார்ப்பு ரொம்ப ஆகவே, ஸ்க்ரீன்-ல பார்த்ததுல இண்டரஸ்ட் இல்லாம போய்டுச்சு).