July 26, 2009

ஊருக்கு எப்படி கால் பண்றீங்க?

Sunday அதுவுமா நல்லா மூக்கு பிடிக்க சாப்பிட்டு சும்மா இருக்கோமே, யாரையாவது தொல்லை பன்னுவோமே-ன்னு என்னோட ஒரு பக்க மூளை சொல்லிகிட்டே இருந்துது. வீட்ல அவர் வேற இல்லே.. மேட்ச் விளையாட போய்ட்டாரு. அவர் இருந்தா சண்டை போட்டு டைம் பாஸ் பண்ணியிருப்பேன். சரி.. ஊருக்கு போன் பண்ணலாம்னு போன் பண்ணி வெச்சதுக்கு அப்பறம் தான் யோசிச்சேன்.. ஊரு உலகத்துல எப்படி எல்லோரும் ஊருக்கு பேசறாங்கன்னு கேக்கலாமேன்னு. இதுக்கு அவ்ளோ முக்கியத்துவம் இல்லேனாலும், நாங்க ஊருக்கு வந்த புதுசுல மண்டை காஞ்ச விஷயங்கள்ல இதுவும் ஒன்று.

முதல்ல இங்க வந்த புதுசுல, எனக்கு முன்னாடி இங்க வந்தவங்க காலிங் கார்டு யூஸ் பண்ணிக்கலாம்னு சொன்னாங்க. எனக்கு என்னமோ அது வசதி படவில்லை. ஒரு பெரிய process மாதிரி இருந்துது.. அப்பறம் கொஞ்ச நாளைக்கு கடைக்கு போய் போன் பண்ண ஆரம்பிச்சோம். அப்போ இங்க, ஒரு நிமிஷத்துக்கு இந்தியாவுக்கு பேச 13 cents (யூரோ) ஆச்சு. வேற கடைல ஒரு சென்ட் கம்மியா இருக்குன்னு கெளப்பி விட்டாங்க. நம்ம மனசு கேட்குமா? அந்த கடைக்கும் போய் பார்த்தோம். இப்படியே அக்கம்பக்கத்து தெருவுல இருக்கற எல்லா போன் கடைக்காரர்ஸும் நம்ம தோஸ்த் ஆனது தான் மிச்சம்.. ஆனா ஒன்னும் பெரிசா போன் செலவு கம்மியான மாதிரி இல்லே.. அதுவும், வந்த புதுசு வேற.. குக்கர் எப்படி அடுப்புல வைக்கணும்னு ஆரம்பிச்சு தயிர் சாதம் முதல்ல சாப்பிடனுமா இல்லே சாம்பார் சாதம் மொதல்ல சாப்பிடனுமான்னு (அட, எல்லாம் ரெடிமேட் தான்) எல்லாம் அம்மாகிட்ட கேட்டு தான் பழக்கமா.. போன் பில் contribution ஏறிக்கிட்டே தான் போச்சு.

ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி தான் ஒரு நண்பர் "VOIP calls" பற்றி சொன்னாரு. interesting-ஆ இருந்துது. ட்ரை பண்ணி பார்க்கலாம்னு பார்த்து, இப்போ வரைக்கும் அது மூலம்தான் மத்த ஊருக்கு பேசறோம். பல விஷயம் சௌகரியமா இருக்கு. உதரணத்திற்கு, நம்ம வீட்டு landline-ல இருந்தே பேசலாம். கம்ப்யூட்டர் முன்னாடியே உட்காரணும்னு அவசியம் இல்லே.. தொடர்ப ஏற்ப்படுத்த மட்டும் இன்டர்நெட் இருந்தா போதும். அதுக்கு அப்புறம் தேவை இல்லே. வெளியில் இருந்தாலும் ஒரு நம்பர்-க்கு கால் பண்ணா அவங்க தொடர்ப ஏற்படுத்தி தருவாங்க. எல்லாத்துக்கும் மேல அங்க இருக்கறவங்களும் கம்ப்யூட்டர் முன்னாடி இருக்கணும்னு அவசியம் இல்லே.. (எங்க அம்மாக்கு கம்ப்யூட்டர்-phobia உண்டு). SMS சேவையும் தராங்க.

இந்த VOIP சேவை ஏதாவதுல அக்கௌன்ட் எடுத்துகிட்டா போதும். நம்ம usage-க்கு ஏற்ப 10 euro, 15 euro -ன்னு சார்ஜ் பண்ணிக்கலாம். ரெண்டு மூணு விதமா கால் initiate பண்ணலாம்.

  • அவங்க குடுக்கிற application download பண்ணி அது மூலமா கால் பண்ணலாம் (அது நம்ம skype, google talk மாதிரி தான். ஆனால் இன்டர்நெட் தேவைப்படும்).
  • உங்களுக்கு landline இருந்துதுனா phone-to-phone பண்ணலாம். Source Phone -ல உங்க நம்பரையும் Destination Phone -ல எங்க பண்ணனுமோ அந்த நம்பரையும் குடுத்துட்டா அவங்களே உங்களுக்கு மொதல்ல கால் பண்ணிட்டு, நீங்க எடுத்தவுடனே இன்னொரு நம்பர்-க்கும் டயல் பண்ணிடுவாங்க. இந்த மாதிரி பேசனும்னா one-time connection சார்ஜ் உண்டு (ஆனா அது ரொம்ப கம்மி தான்.. ஒரு காலுக்கு ஒரு முறை தான்)... பிளஸ் உங்க கால் சார்ஜ்.

இதுல இன்னொரு வசதி என்னன்னா, US, UK போன்ற ஒரு சில நாடுகளுக்கு கால் சார்ஜ் 0 சென்ட் தான். (பிளஸ் உங்க connection சார்ஜ்). இங்க, நாங்க landline தனியா வாங்கிக்கலை. ஆனா, அது ஒரு பெரிய விஷயமே இல்லே.. உங்க office landline-அ உங்க மொபைல்-க்கு ரீ-டைரக்ட் பண்ணிக்கோங்க. ஆபீஸ்ல கேட்டா "நீங்க எப்போ வேணும்னாலும் எனக்கு கால் பண்ணலாம்.. 24-hrs சப்போர்ட்"-ன்னு பெரிய பனிப்பாறைய தூக்கி அவங்க தலைல வெச்சிடுங்க. ;-)

சரி.. இப்போ(வாது) மேட்டர்-க்கு வரேன். இப்போ பிரச்சனை என்னன்னா, இதுலயும், இன்னிக்கு ஒரு VOIP சேவைல இந்தியாவுக்கு கால் பண்ண 6 சென்ட் அப்படினா, நாளைக்கே இன்னொரு சேவைல 4.5 சென்ட்-ன்னு சொல்றாங்க. தெரு தெருவா போன் கடைக்கு அலைஞ்சது மாதிரி இப்போ இணையத்தளம் இணையதளமா அலையறோம். Life is no better!

எங்களுக்கு தெரிஞ்ச ஒரு சில VOIP சேவைகள் பற்றின விவரங்கள் இதோ.. (எல்லாம் யுரோ-ல).

சேவை       இந்தியாவுக்கு
landline mobile
Justvoip 0.04 0.035
Smartvoip 0.01 0.01
Freecall 0.017 0.02
NoNoh 0.03 0.03
Jumblo 0.01 0.007
Voipcheap 0.07 0.07

இந்த சேவைகள்ல ரிஜிஸ்தர் பண்றவங்களுக்கு ஒரு விஷயம் சொல்லணும்..

  • Form பூர்த்தி செய்யும்போது இந்திய முகவரி குடுங்க.. VAT தவிர்க்கலாம்.
  • phone-to-phone யூஸ் பண்ணனும்னு நினைக்கறவங்க ஒரு landline நம்பர்-ஐ குடுங்க. மொபைல் நம்பர்-க்கும் வொர்க் ஆகும்.. ஆனா connection சார்ஜ் ஜாஸ்தியா இருக்கலாம்.. நீங்க இருக்கற இடத்த பொறுத்து.

நீங்க எப்படி ஊருக்கு கால் பண்றீங்க? சொல்லுங்க.. மத்தவங்களுக்கு பயன்படும். (Europe-ன்னு இல்லீங்க ... மத்த நாடுகள்ல இருக்கறவங்களும் சொல்லிட்டு போங்க..). இதை பற்றிய ஒரு வாக்கெடுப்பும் சேர்த்திருக்கிறேன்.. முடிஞ்சா, பக்கத்துல, அதுலயும் ஒரு ஒட்டு குத்திட்டு போங்க.

9 comments:

  1. Actionvoip is best one

    ReplyDelete
  2. From UAE, InterVOIP & BetaCalls are working fine. Please advise me any other?.

    ReplyDelete
  3. Beta Calls best. BetaCalls Mobile Dialer makes from desktop pcs and it is breez to call from

    ReplyDelete
  4. when i try to sign up to the links u gave "they say that for unknown reason i could not be registered"

    do u have any idea?

    ReplyDelete
  5. Could you please tell me which one you are trying? I created an account with nonoh.net just now and it works.

    ReplyDelete
  6. Actionvoip pc to phone is also cheap. 0.01 euro per minute to call india. Phone to Phone through internet connection may be costlier.

    ReplyDelete
  7. Hi I have a betaclls calling card, but I am unable to download the dialler as the site is blocked. Can someone help me with this

    ReplyDelete
  8. Hello, do you mean the betacalls desktop application?

    ReplyDelete
  9. I use Smartvoip. If you have internet connection in India, they can use this same account to call back to us (for most of the countries to the landline it is free for about 300 minutes per week). - Velu

    ReplyDelete