July 09, 2010

புட்பால் ஜோசியம் சொல்லும் ஆக்டோபஸ்

Paul-ன்னு ஒரு ஆக்டோபஸ். அது புட்பால் ஜோசியம் சொல்லுதாம். அது பி.பி.சி. வரைக்கும் போய் ஊரே அது பத்தி தான் இன்னிக்கு பேசிக்கிட்டு இருக்கு.

5000 கி.மி. தாண்டி ஜெர்மனி-ல இருக்கற ஒரு ஆக்டோபஸ், தென் ஆப்பிரிக்கால நடக்கற ஒவ்வொரு மேட்ச் ரிசல்ட்டையும் புட்டு புட்டு வைக்குதாம். அதுவும் எப்படி? ரெண்டு கண்ணாடி பெட்டில, விளையாட போற ரெண்டு நாட்டுடைய கொடியையும் ஒட்டி, அது இருக்கற தண்ணி தொட்டில உள்ள விட்டுடுவாங்களாம். அது ஒன்னுத்துகுள்ள போய் படுத்துக்குமாம். அந்த பெட்டில எந்த நாட்டு கோடி இருக்குதோ அந்த நாடு அன்னிக்கு மேட்ச் வின் பண்ணிடுமாம். அமெரிக்க ஒபாமா-ல இருந்து நம்ம ஊரு அமிதாப் பச்சன் வரைக்கும் இதான் ட்விட்டிங் இன்னிக்கு. 

 

கொடுமைடா சாமி.

No comments:

Post a Comment