May 26, 2010

உங்க ப்ளாகில் Forum அமைக்க

image இப்போ இருக்கற வெட்டி வேலை போதாது, மத்தவங்கள நம்ம ப்ளாகிலேயே குடி இருக்க வெக்கணும்னு நினைக்கறவங்க… இல்லே நாம எதாவது உபயோகமா ஷேர் பண்ணிக்குவோமேனு (என்னைய மாதிரி) நினைக்கறவங்க உங்க ப்ளாகிலேயே ஒரு forum சேர்த்துக்கலாம்.

Tal.ki அப்படின்னு ஒரு சர்வீஸ் .. ஒன்னும் பெரிய விஷயம் இல்லே. உங்க ப்ளாக்ல அவங்க குடுக்கற ஒரு கோட்-ட சேர்த்துட்டா போதும். உங்க Forum ரெடி. சரி. கொஞ்சம் detail-a பார்ப்போம்.

- உங்க ப்ளாக்-ல ஒரு தனி பக்கம் create பண்ணிடுங்க. (போஸ்ட் இல்லே.. ஒரு பேஜ்).
- அதோட "Edit HTML"-ல இவங்க குடுக்கற கோட்-ட பேஸ்ட் பண்ணி, சேவ் பண்ணிட்டா அம்புட்டு தான்.

(என்னோட ப்ளாகில நான் சேர்த்திருக்கேன். பாருங்க). மத்த forum மாதிரி ஒரு database வெச்சி members எல்லாம் நீங்க மெயின்டேன் பண்ண வேண்டிய அவசியம் இல்லே. உங்க கூகிள், பேஸ்புக், OpenID, எல்லாம் செல்லுபடியாகும். உங்க forum-ல தனியா மெம்பெர் ஆக வேண்டிய அவசியம் இல்லே. அவங்க அவங்க ID யூஸ் பண்ணிக்கலாம்.

மேலும் தெரிஞ்சிக்க இங்க போங்க.. ட்ரை செஞ்சி பார்த்து சொல்லுங்க.

No comments:

Post a Comment