Showing posts with label news. Show all posts
Showing posts with label news. Show all posts

July 09, 2010

புட்பால் ஜோசியம் சொல்லும் ஆக்டோபஸ்

Paul-ன்னு ஒரு ஆக்டோபஸ். அது புட்பால் ஜோசியம் சொல்லுதாம். அது பி.பி.சி. வரைக்கும் போய் ஊரே அது பத்தி தான் இன்னிக்கு பேசிக்கிட்டு இருக்கு.

5000 கி.மி. தாண்டி ஜெர்மனி-ல இருக்கற ஒரு ஆக்டோபஸ், தென் ஆப்பிரிக்கால நடக்கற ஒவ்வொரு மேட்ச் ரிசல்ட்டையும் புட்டு புட்டு வைக்குதாம். அதுவும் எப்படி? ரெண்டு கண்ணாடி பெட்டில, விளையாட போற ரெண்டு நாட்டுடைய கொடியையும் ஒட்டி, அது இருக்கற தண்ணி தொட்டில உள்ள விட்டுடுவாங்களாம். அது ஒன்னுத்துகுள்ள போய் படுத்துக்குமாம். அந்த பெட்டில எந்த நாட்டு கோடி இருக்குதோ அந்த நாடு அன்னிக்கு மேட்ச் வின் பண்ணிடுமாம். அமெரிக்க ஒபாமா-ல இருந்து நம்ம ஊரு அமிதாப் பச்சன் வரைக்கும் இதான் ட்விட்டிங் இன்னிக்கு. 

 

கொடுமைடா சாமி.

May 09, 2010

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 - எப்படி இருக்கும்?

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9-ல பல புது விஷயம் எல்லாம் வர போகுது. இது வரைக்கும் எந்த web standards-யும் மதிக்காத மைக்ரோசாப்ட், இதுல ரொம்ப திருந்திருக்காங்கனு கேள்வி பட்டேன். அதுல ஒரு சில விஷயம்ஸ் இதோ..

- HTML5 & CSS3 சப்போர்ட். 
- ஸ்பீட் & மெமரி விஷயத்துல ரொம்ப சேன்ஜ் இருக்கு. (பின்ன.. chrome, firefox எல்லாம் சமாளிக்கனுமே)
- மத்தவங்களும் IE-க்காக டெவலப் பண்ணலாம். அதுக்கு வழி பண்ணிருக்காங்க.

சரி.. இதெல்லாம் இருக்கட்டும். IE9 ஒரு ப்ரிவ்யூ பார்த்துடலாமா? இத டவுன்லோட் பண்ணி இன்ஸ்டால் பண்ணி பாருங்க.

February 15, 2010

தண்ணீர் கேட்டதால் விமானத்தில் அனுமதி இல்லை

மன்ஹாட்டன் நகர டாக்டர் ஒருத்தர் குடிக்க தண்ணீர் கேட்டதால அவரையும் அவர் குடும்பத்தையும் விமானத்த விட்டு இறங்க சொல்லிட்டாங்களாம். 

La Guardia விமான நிலையத்துல 2 மணி நேரமா நின்னுகிட்டு இருந்த ஸ்பிரிட் விமானத்துல தான் இந்த கூத்து நடந்திருக்கு. டாக்டர் அவரோட கர்ப்பிணி மனைவிக்காக குடுக்க தண்ணீர் கேட்டிருக்கார். டேக் ஆப்-க்கு முன்னாடி நாங்க தண்ணி குடுக்க மாட்டோம். அது எங்க பாலிசில இல்லேன்னு சொல்லிருக்காங்க. அவர் விடாம கேட்டதால, அவரையும் அவர் குடும்பத்தையும் (மரியாதையா!?) இறங்க சொல்லிட்டாங்க.

டாக்டர் என்ன பண்ணுவாரு பாவம்… ஊருக்கு வந்து ஒவ்வொரு நியூஸ் பேப்பர்-ஆ பேட்டி குடுத்துட்டாரு.

அட, அங்கயுமா தண்ணிக்கு சண்டை?!

August 18, 2009

விக்கிபீடியா - புக் செய்வது எப்படி?

Wikipedia Beta பற்றி ஒரு பதிவுல சொல்லியிருந்தேன். (அது என்னங்க... இங்கிலீஷ்ல ஒரு விஷயத்த சொல்றது அவ்ளோ தப்பான விஷயமா? ஒருத்தர் கூட அந்த பக்கத்துல தலை காட்டலை!). இது அதோட ஒரு follow-up.

Students-க்கும் மற்றவர்களுக்கும் உபயோகமா இருக்கும். விஷயம் இதுதான். இணையதளத்தோட ஒரு பக்கம் மட்டும் PDF ஆக தரவிறக்கம் பண்றது ரொம்ப ஈசியான விஷயம். அதே நமக்கு தேவையான எல்லா பக்கங்களையும் ஒரு முழுமையான புக்கா தரவிறக்கம் செய்துண்டா நல்ல இருக்கும் இல்லியா? இப்போ Wikipedia Beta-ல அதுக்கு ஒரு வழி இருக்கு.

image 

 

 

 

உங்க Wikipedia Beta-வின் இடது sidebar-ல “Create a book” கீழுள்ள Options யூஸ் பண்ணிக்கலாம். நீங்க எதோ ஒரு பக்கத்துல இருக்கீங்கன்னு வெச்சிக்கோங்க. அத அப்படியே "Add page to book" பண்ணிக்கலாம். ஒரு புத்தகம் உங்களுக்காக create பண்ணிடுவாங்க.

 

 

 

 

image

 

 

அந்த புக்குல இன்னும் பல பக்கங்கள் சேர்த்துக்கலாம். ஒரு தடவை நீங்க ஒரு புக் create பண்ணிட்டீங்கனா பக்கத்துல இருக்கற மாதிரி Options வந்துடும். பக்கங்கள் சேர்க்க சேர்க்க இதுல அப்டேட் ஆகிடும்.

 

இந்த புக்க நீங்க edit பண்ணனும்னா "Show Book" click பண்ணுங்க. அந்த ஸ்க்ரீன்ல நீங்க பக்கங்கள மாற்றி அமைக்க, அகற்ற எல்லாம் பண்ணலாம். அந்த ஸ்க்ரீன்லையே நீங்க PDF / OpenDocument Text -ஆக தரவிறக்கம் செய்யலாம். இல்லே புக்காவே order பண்ணலாம் (PediaPress மூலமாக).

image

அதுமட்டுமில்லே, இன்னும் பல வேலைகள் செய்யலாம். (மேலுள்ள படத்த பாருங்க). புக்குனா வெறும் அந்த ஸ்க்ரீன்-இன் screenshot-னு நினைச்சிடாதீங்க. Index எல்லாம் இருக்குற ரொம்ப proper-ஆன புக்.

இதையும் ட்ரை பண்ணி பார்த்துடலாமே..!!

August 13, 2009

கூகிள் ரீடர் - புது விஷயம்ஸ்

கூகிள் ரீடர் பயன்படுத்தறவங்க ஏற்கனவே பார்த்திருபீங்க. புதுசா கொஞ்ச options அறிமுகப்படுதிருக்காங்க.

  • "Send to..." : இனி கூகிள் ரீடரில் இருந்தே நீங்க ஒரு செய்திய Blogger, Facebook போன்ற பிரபலமான இணையதளத்திற்கு forward பண்ணலாம். இது மூலம் உங்கள் ப்ளாக்கர் போன்ற பக்கங்களில் செய்திகளை உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளலாம். உங்க ரீடரில் வரும் ஒவ்வொரு பதிவிற்கும் கீழுள்ள options -ல இதுவும் இருக்கும். உங்களுக்கு வேண்டிய சேவைகளை (Blogger, Facebook, Twitter, Digg etc) Settings -> Sent To பக்கம் மூலம் சேர்த்துக்கொள்ளலாம். அங்கே குடுக்கபட்டுள்ளவை மட்டுமல்லாது custom link மூலம் மற்ற பிற தளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.
  • "Feeds from people you follow": நீங்க follow பண்ணும் உங்க நண்பர்களோட ப்ளாக், ட்விட்டர், பிசாசா போன்ற தளங்களை நீங்க உங்க ரீடரில் சேர்த்துக்கலாம். அதுக்கு "Browse for Stuffs --> From people you follow " பக்கத்திருக்கு தாவுங்கள்.
  • "Mark as read": இது நாம எல்லோரும் உபயோகப்படுத்தும் விஷயம். இனி அந்த லேபிள் கீழ் உள்ள எல்லாவற்றையும் "read" போடாமல், நமக்கு தேவையானவற்றை மட்டும் (அதாவது ஒரு நாளைக்கு முன் வந்த பதிவுகள், ஒரு வாரம் முன் வந்தவை, இரண்டு வரம் முன் வந்தவை என) "Mark as read" போட்டுக்கலாம்.

ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.

August 06, 2009

ஆன்லைனில் கிரெடிட் / டெபிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்?

Security_Card ஒரு வாரத்துக்கு முன்னாடி என்னோட Google Reader-ல வந்த நியூஸ். அப்போவே இதை பற்றிய பதிவு போடனும்னு நினைத்தேன். வேற வேலை வந்ததுல, மறந்துட்டேன்.

இது Visa / MasterCard கிரெடிட் / டெபிட் கார்டு பயன்படுத்தி online-transactions பன்றவங்களுக்கான செய்தி இது. ஆன்லைனில் நடக்கும் கிரெடிட் / டெபிட் கார்டு ஏமாற்று வேலை பற்றி எல்லாம் எல்லோருக்கும் தெரியும்னு நினைக்கிறேன். அதுனால அதைப்பற்றி சொல்லி டைம் வேஸ்ட் பண்ண போறதில்லே.

இப்போ விஷயம் என்னன்னா, ஆகஸ்ட் 1 2009 முதல் ரூபாய் 5000 க்கு மேல ஆன்லைனில் எதாவது வாங்கினா ஒரு பாஸ்வேர்டும் தரனும். வெறும் கிரெடிட் கார்டு நம்பரும், அது பின்னாடி இருக்கும் CCV நம்பரும் மட்டும் இருந்தா யார் வேணும்னாலும் மத்தவங்க கார்ட யூஸ் பண்ணலாம். அதற்காக தான் இந்த ஏற்பாடு. ரிசர்வ் வங்கி இதை செயல்படுத்த இந்திய வங்கிகளுக்கும், ஆன்லைன் சேவைகளுக்கும் அழைப்பு விடுத்திருக்காங்க. செயல் படுத்த கொஞ்சம் நாள் ஆகலாம்.

இந்த சேவைய நீங்க பயன்படுத்த உங்க கிரெடிட் / டெபிட் கார்ட, நீங்க அதோட வங்கியோட இணையதளத்துல ரிஜிஸ்தர் பண்ணியிருக்கணும். இந்த புது பாஸ்வோர்ட்-ல நீங்க, எண்கள் மட்டுமே குடுக்க முடியும்.

நீங்க உங்க கார்ட ரிஜிஸ்தர் பண்ணவும், மேலும் தெரிஞ்சிக்கவும் கீழே உள்ள links மூலமா உங்க வங்கியோட இணையதளத்துக்கு போகலாம் (சில பிரபலமான வங்கிகள் மட்டும்):

HDFC Bank, ICICI Bank, Citibank, HSBC Bank, Standard Chartered, State Bank of India,Axis Bank, ABN Amro, Deutsche Bank, Karur Vysya Bank

ஏற்கனவே இதுல ரிஜிஸ்தர் பண்ணவங்க உங்க அனுபவத்தை பின்னூட்டம் மூலமா சொல்லிட்டு போங்க.

July 15, 2009

Moon Landing: Celebrating 40th Anniversary

It was in BBC news all this month… “Celebrating 40th Anniversary of the moon landing… That’s one small step for a man; one giant leap for mankind”. I should say that I was pretty bored with these ads. And now I have this in my Google Reader, too. But this one was definitely more interesting. I don’t know if any of you saw it already.

NASA had put up the video and other documents from the THE DAY. Check out this site. The “Interactive Features” link allows you to walk (?) through the Lunar surface and explore some points of interests. There is also a transcript of the conversation on-board. And few other interesting pieces of news for all those who are interested.

Additional Info: NASA is playing this Apollo 11 Mission, that happened on July 24, 1969. Tune in to NASA’s Radio to hear to it. Also, the audio transcripts are available (but be prepared yourself mentally to read more than 1300 pages ;) )

April 15, 2009