வேலைக்காகவோ அல்லது ஊர் சுற்றி பார்க்கவோ வெளி நாடு போறீங்களா? அந்த நாட்டு மொழி கொஞ்சம் தெரிஞ்சா நல்லது தானே.. hi, hello சொல்ல, ஏதாவது உதவி கேட்க… அட, எனக்கு உங்க பாஷை தெரியாதுன்னு சொல்லவாது எப்படின்னு தெரியனும் இல்லே.. முக்கியமா European countries-க்கு வந்தா நெஜம்மாவே பைத்தியம் பிடிச்சிடும்.. English மா...திரி தெரியும்.. ஆனா English இருக்காது (சுய அனுபவம்.. இங்க இருக்கறவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்).
அந்த மாதிரி வெளி நாட்டுக்கு போறவங்க கொஞ்சமா அந்த ஊர் மொழிய கத்துக்கணும்னு BBC ஒரு புதிய பட்டியல் போட்டிருக்காங்க. எப்படி ஒருத்தர விஷ் பண்ணனும்.. எப்படி டைம் கேக்கணும்னு.. எல்லாம், சில புகழ் பெற்ற மொழிகள்-ல translate பண்ணி குடுத்திருக்காங்க. ஒரு check-list மாதிரி உபயோகபடுத்தலாம். இங்க போய் பாருங்க. இன்னும் நிறைய தெரிஞ்சிக்கலாம்.
இப்போதைக்கு 36 மொழிகள் சேர்த்திருக்காங்க. வார்த்தை வார்த்தையா இல்லாம தேவைக்கு ஏற்ப வரிகளா சொல்லிருக்காங்க. அதுவும் இல்லாம, audio files-உம் இருக்கறதுனால உர்ச்சரிப்பும் தெரிஞ்சிக்கலாம். அதுனால உபயோகமா இருக்கும்ன்னு நினைக்கிறேன். பேச வரலைனா கூட எழுதி எடுத்துக்கிட்டா அத அவங்க கிட்ட காட்டி கேட்டுக்கலாம்.
ஆனா அவங்க பதில திரும்பி எழுதி காட்டி அது உங்களுக்கு புரியலைனா அதுக்கு நான் பொறுப்பாக மாட்டேன் :)
No comments:
Post a Comment