இத படிக்கரவங்கள்ள எவ்வளவு பேர் என்ன மாதிரி ஜிமெயில்-ல shortcut கீஸ் யூஸ் பண்றீங்கன்னு தெரியலை. இருந்தாலும் சொல்லிடலாமேன்னு தான் இந்த பதிவு. (ரொம்ப மொக்கை போட மாட்டேன். அதுனால கடைசீவரைக்கும் படிக்கலாம்)
ஜிமெயில்-ல நிறைய shortcut கீஸ் இருக்குனு தெரியும். ஆனா அதுல எதுவெல்லாம் நாம அடிக்கடி யூஸ் பண்ணவேண்டியது இருக்குனு தெரியுமா? நான் ரொம்ப யூஸ் பண்றது இதுவெல்லாம் தான்:
j - (ஓபன் பண்ணாம) அடுத்த மெயிலுக்கு தாவ.
k - (ஓபன் பண்ணாம) முன்னாடி மெயிலுக்கு தாவ.
h - (ஓபன் பண்ணாம) ஒரு மெயிலுக்குள்ள என்ன இருக்குனு பார்க்க. (செலக்ட் பண்ண மெயிலோட ப்ரிவ்யு)
x - ஒரு மெயில செலக்ட் பண்ண.
o - செலக்ட் பண்ண மெயில ஓபன் செய்ய.
c - புது மெயில் கம்போஸ் பண்றதுக்கு.
d - செலக்ட் பண்ண மெயில டிலீட் பண்ண.
/ - மேல ஒரு சர்ச் பாக்ஸ் இருக்குமே... அதுக்கு தாவ.
gi - வேற எங்க இருந்தாலும் இன்பாக்ஸ்-க்கு போக.
gs - ஸ்டார்-ed பாக்ஸ்-க்கு போக.
gl - மேல இருக்கற சர்ச் பாக்ஸ்-ல ஒரு லேபில் தேட.
r – ரிப்பளை
a - archive செய்ய. இது தான் என்னோட பவர் கீ. (சொல்றேன் சொல்றேன்...)
இப்போ இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னு கேக்கறீங்களா? ரெண்டு காரணம் இருக்கு.
ஜிமெயில்ல நிறைய ஸ்பேஸ் குடுத்தாலும் குடுத்தாங்க... சகட்டு மேனிக்கு கண்டதையும் subscribe பண்ணி, நம்ம மக்கள் இன்பாக்ஸ த்ராஷ் பாக்ஸா மாத்தரதே பொழப்பா போச்சு. இன்பாக்ஸ் க்ளீனா இருந்த எவ்ளோ நல்லா இருக்கும்? க்ளீனானா அழகா தீம் எல்லாம் போட்டு கண்ண புன்னாக்கரத சொல்லலை. நான் சொல்ல வரது, அனாவசியாமான மெயில்ஸ் க்ளீனப் - மொக்கை forward, ஒரு தடவைக்கும் மேல படிக்கமாட்டோம்னு நாம நினைக்கிற மெயில் etc. இது எல்லாம் இன்பாக்ஸ்ல இருக்கணும்னு அவசியம் இல்லியே? அது அது அந்த அந்த folder-ல படிச்சவுடனே மூவ் பண்ணிடலாம் தானே.. இல்லே, இதுக்கு எல்லாம் எனக்கு டைம் இல்லேன்னு சொல்ற பிஸீ ஆட்கள், எல்லாம் படிச்சி முடிச்சதுக்கு அப்புறம் ஒரு "a"-வ தட்டி விட்டுடுங்க. அந்த கான்வர்சேஷன் அப்படியே "All Mails"-ல போய் உக்காந்துக்கும். இன்பாக்ஸ்-ல ஆயிரக்கனுக்குல இருக்காது. ஜிமெயில் ஆரம்பிச்ச காலத்துல இருந்து (2004) நான் யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன். எதையும் அனாவசியமா டிலீட் பண்ணதில்லே, இப்போவும் 17000-க்கு கிட்டத்தட்ட இருக்கு. ஆனா இன்பாக்ஸ் எப்போவுமே குப்பைதொட்டி மாதிரி இருக்காது. மிஞ்சி மிஞ்சி போனா 5 மெயில் இருக்கும்: படிச்சி ரிப்ளை பண்ணறதுக்காக. அதுனால தான் என்னோட "a"-வ நான் பவர் கீ-ன்னு சொல்றேன். உங்க இன்பாக்ஸ் சீக்கிரம் லோட் ஆகும். உங்களோட எந்த மெயிலும் எங்கயும் போகாது. தேடினா வரும். "ga"-ன்னு அடிச்சீங்கனா உங்க "All Mails"-க்கு போகும். அங்க பார்த்துக்கலாம்.
கேக்க நல்ல இருக்கு. பாதி மெயில் டைப் பண்ணும்போது இதெல்லாம் தேடிட்டு இருக்க முடியாதுன்னு சொல்றவங்களுக்காக இது. இந்த மாதிரி shortcut கீஸ் எல்லாம் தெரிஞ்சிக்க வேற எந்த வெப்சைட்-க்கும் போக வேண்டாம். நீங்க ஜிமெயில்ல இருக்கும்போதே <shift>+? பண்ணீங்கனா உங்க முன்னாடி எல்லா shortcut கீசும் வந்துடும். சிம்பிள் இல்லே?
ட்ரை பண்ணி பார்த்து சொல்லிட்டு போங்க. நீங்க வேற எதாவது டிப்ஸ் சொல்றதுனாலும் சொல்லலாம்.
August 19, 2010
ஜிமெயில்- உங்கள் shortcut கீஸ் பற்றி தெரிந்துகொள்ள
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment