ஒரு வாரத்துக்கு முன்னாடி என்னோட Google Reader-ல வந்த நியூஸ். அப்போவே இதை பற்றிய பதிவு போடனும்னு நினைத்தேன். வேற வேலை வந்ததுல, மறந்துட்டேன்.
இது Visa / MasterCard கிரெடிட் / டெபிட் கார்டு பயன்படுத்தி online-transactions பன்றவங்களுக்கான செய்தி இது. ஆன்லைனில் நடக்கும் கிரெடிட் / டெபிட் கார்டு ஏமாற்று வேலை பற்றி எல்லாம் எல்லோருக்கும் தெரியும்னு நினைக்கிறேன். அதுனால அதைப்பற்றி சொல்லி டைம் வேஸ்ட் பண்ண போறதில்லே.
இப்போ விஷயம் என்னன்னா, ஆகஸ்ட் 1 2009 முதல் ரூபாய் 5000 க்கு மேல ஆன்லைனில் எதாவது வாங்கினா ஒரு பாஸ்வேர்டும் தரனும். வெறும் கிரெடிட் கார்டு நம்பரும், அது பின்னாடி இருக்கும் CCV நம்பரும் மட்டும் இருந்தா யார் வேணும்னாலும் மத்தவங்க கார்ட யூஸ் பண்ணலாம். அதற்காக தான் இந்த ஏற்பாடு. ரிசர்வ் வங்கி இதை செயல்படுத்த இந்திய வங்கிகளுக்கும், ஆன்லைன் சேவைகளுக்கும் அழைப்பு விடுத்திருக்காங்க. செயல் படுத்த கொஞ்சம் நாள் ஆகலாம்.
இந்த சேவைய நீங்க பயன்படுத்த உங்க கிரெடிட் / டெபிட் கார்ட, நீங்க அதோட வங்கியோட இணையதளத்துல ரிஜிஸ்தர் பண்ணியிருக்கணும். இந்த புது பாஸ்வோர்ட்-ல நீங்க, எண்கள் மட்டுமே குடுக்க முடியும்.
நீங்க உங்க கார்ட ரிஜிஸ்தர் பண்ணவும், மேலும் தெரிஞ்சிக்கவும் கீழே உள்ள links மூலமா உங்க வங்கியோட இணையதளத்துக்கு போகலாம் (சில பிரபலமான வங்கிகள் மட்டும்):
HDFC Bank, ICICI Bank, Citibank, HSBC Bank, Standard Chartered, State Bank of India,Axis Bank, ABN Amro, Deutsche Bank, Karur Vysya Bank
ஏற்கனவே இதுல ரிஜிஸ்தர் பண்ணவங்க உங்க அனுபவத்தை பின்னூட்டம் மூலமா சொல்லிட்டு போங்க.
Useful Tips
ReplyDeletethanks My Friend