இது நாள் வரைக்கும் கூகிள் மெயில்-லில் auto-complete மூலமா நாம டைப் பண்ண பண்ண நம்ம காண்டாக்ட் எல்லாம் ஒரு drop down-ல வரும்.. அதுல இருந்து நாம சூஸ் செஞ்சிக்கிட்டு இருக்கோம்... இல்லியா? இப்போ அவங்களே மத்த மின்னஞ்சல்-ல வர மாதிரி ஒரு தனி காண்டாக்ட்ஸ் விண்டோ குடுக்கறாங்க.
ஒரு மெயில் கம்போஸ் பண்ணும்போது அந்த "To"-வை கிளிக் பண்ணுங்க (இன்னிக்கு வரைக்கும் அந்த "To" ஒரு லிங்காக இருந்ததில்லை. இன்றிலிருந்து அது ஒரு லிங்க். இது எவ்ளோ பேர் பார்த்தீங்கனு தேரிலே!). அது ஒரு புது விண்டோ திறக்கும். அதுல உங்க காண்டாக்ட்ஸ் எல்லாம் வரும்.. அதில் செலக்ட் பண்ணிக்கலாம். ஒரு காண்டாக்ட்-ஐ தேடலாம். மேலுள்ள drop down பாக்ஸ்-ல உங்களோட Groups எல்லாம் வந்துடும். செலக்ட் பண்ண காண்டாக்ட்ஸ் எல்லாம் உங்க மெயில்-லில் சேர்ந்துடும்.
இது நல்லா தான் இருக்கு.. ஆனா சில காண்டாக்ட்ஸ் நாம "Cc", "Bcc" -ல போட வேண்டியிருக்கும். அதுக்கு பழயபடி "Add Cc"/"Add Bcc" கிளிக் பண்ணி அதுக்கு அப்பறம் அதற்க்கான காண்டாக்ட்ஸ் செலக்ட் பண்ண வேண்டும்... Microsoft Outlook-ல இருக்கற மாதிரி ஒரே விண்டோ-ல எல்லா வேலையும் முடிஞ்சா நல்ல இருக்கும் இல்லே?
No comments:
Post a Comment