கூகிள் ரீடர் பயன்படுத்தறவங்க ஏற்கனவே பார்த்திருபீங்க. புதுசா கொஞ்ச options அறிமுகப்படுதிருக்காங்க.
- "Send to..." : இனி கூகிள் ரீடரில் இருந்தே நீங்க ஒரு செய்திய Blogger, Facebook போன்ற பிரபலமான இணையதளத்திற்கு forward பண்ணலாம். இது மூலம் உங்கள் ப்ளாக்கர் போன்ற பக்கங்களில் செய்திகளை உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளலாம். உங்க ரீடரில் வரும் ஒவ்வொரு பதிவிற்கும் கீழுள்ள options -ல இதுவும் இருக்கும். உங்களுக்கு வேண்டிய சேவைகளை (Blogger, Facebook, Twitter, Digg etc) Settings -> Sent To பக்கம் மூலம் சேர்த்துக்கொள்ளலாம். அங்கே குடுக்கபட்டுள்ளவை மட்டுமல்லாது custom link மூலம் மற்ற பிற தளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.
- "Feeds from people you follow": நீங்க follow பண்ணும் உங்க நண்பர்களோட ப்ளாக், ட்விட்டர், பிசாசா போன்ற தளங்களை நீங்க உங்க ரீடரில் சேர்த்துக்கலாம். அதுக்கு "Browse for Stuffs --> From people you follow " பக்கத்திருக்கு தாவுங்கள்.
- "Mark as read": இது நாம எல்லோரும் உபயோகப்படுத்தும் விஷயம். இனி அந்த லேபிள் கீழ் உள்ள எல்லாவற்றையும் "read" போடாமல், நமக்கு தேவையானவற்றை மட்டும் (அதாவது ஒரு நாளைக்கு முன் வந்த பதிவுகள், ஒரு வாரம் முன் வந்தவை, இரண்டு வரம் முன் வந்தவை என) "Mark as read" போட்டுக்கலாம்.
ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.
http://www.labnol.org/internet/download-google-reader-stories-as-pdf/9389/ - "Send to"-வின் மேலும் சில பயன்பாடுகள்.
ReplyDelete